ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.உமா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.தேன்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். விழாவில் வார்டு உறுப்பினர்கள் ஆர்.பாரதி, எஸ்.கிருஷ்ணவேணி, பி.சபிதா, என்.ராஜா, டி.ரேவதி, இ.பாண்டுரங்கன், எஸ்.முனியம்மாள், டி.வினோத்குமார், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்பட கலர் கலந்து கொண்டனர்.
NEWS EDITOR : RP