சிறைகள் என்பது சீர்திருத்ததிற்கானவை தான். ஆனால் சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி’ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் அமிக்ஸ் க்யூரி தெரிவித்துள்ளதாவது. சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறைச்சாலைகளிலேயே பிறந்துள்ளனர். எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.