சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் (வயது 46) என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார்.
அவர்கள் செல்லும்போது வழியில், பசீர் ரிஸ் என்ற இடத்தில், மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர் பின்னால் திரும்பி, காரில் அமர்ந்திருந்த பெண்ணை நோக்கி கத்தி கூச்சலிட்டு உள்ளார். தவறான முகவரியை கொடுத்து, தவறான வழியை காட்டி விட்டாய் என கூறியுள்ளார்.
நீ ஒரு முட்டாள் என சத்தம் போட்டுள்ளார். இதுபற்றி வீடியோ ஒன்றை ஹீடன் எடுத்து வைத்து, அதனை தன்னுடைய பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், கார் ஓட்டுநர் ஹீடனிடம், உன்னுடைய மகள் உயரம் குறைவாக (1.35 மீட்டருக்கு கீழ்) உள்ளார் என தொடர்ந்து கூறியதுடன், உன்னுடைய மகள் சட்டவிரோதம் ஆனவள் என அழைத்துள்ளார்.
அந்த ஓட்டுநர் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதும், அடுத்து உடல் சார்ந்த தாக்குதலை நடத்த கூடும் என்ற அச்சத்தில் நடந்த சம்பவங்களை ஹீடன் வீடியோவாக எடுத்து உள்ளார். இதுபற்றி ஹீடன் கூறும்போது, பழுப்பு நிற தோலோ, இந்தியரோ, எப்படியாயினும் அவர் பேசியது ஏற்று கொள்ளத்தக்கதல்ல. அவர் இனவாத அடிப்படையில் பேசியுள்ளார். என்னுடைய மகளும் அதிர்ச்சியடைந்து விட்டார் என கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP