பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடியால், காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்தது. ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அப்போது, கடன் பெற சக்கர நாற்காலியில் அழைத்து வந்த நபர் கையெழுத்துப் போடும்போது மரணமடைந்தது போல வங்கி ஊழியர்கள் கருதினர். ஆனால், அவசர உதவி ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.