தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.“நான் ஆபாச பட நடிகையாக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அந்த படங்களில் நடித்து இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு அப்படி இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். வெளியில் பல்வேறு நல்ல காரியங்களையும் செய்து வருகின்றேன். மேலும் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகின்றேன்.ஆனால் இந்த விஷயங்களை யாரும் பேசுவது இல்லை. எனது பழைய விஷயங்களை பற்றியே பேசுகின்றனர். என்னை ஆபாச பட நடிகை என்ற கோணத்திலேயே இன்னும் பார்க்கின்றனர். இது எனக்கு வருத்தம் அளிக்கிறது. தற்போது டெல்லியில் ஒரு ஓட்டல் திறந்து இருக்கிறேன்.”
“என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்க்கின்றனர்”~ நடிகை சன்னி லியோன்..!!
Please follow and like us: