நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால், பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். குறிப்பாக மும்பையில் 2 வாரங்கள் தாமதமாக கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் பருவமழை துவங்கி இருந்தாலும், தொடங்கிய உடனேயே மழை நல்ல வேகமெடுத்துள்ளது. இதனால் மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு, கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக மும்பை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் கடலுக்குள் நீந்துவது போன்ற உணர்வுடன் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய மும்பை மழையின் நிலைமையைப் பார்த்து, ஒரு செயற்கை நுண்ணறிவு கலைஞர் பருவத்திற்கு மிகவும் பொருத்தமான சில வாகனங்களை கற்பனை செய்து வடிவமைத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மனோஜ் ஓம்ரே என்ற அந்த கலைஞர், மிட்ஜர்னி என்ற AI கருவியைப் பயன்படுத்தி தான் இத்தகைய கற்பனை வாகனங்களை வடிவமைத்துள்ளார். இதில் இரு சக்கர வாகனங்களாக இருந்தாலும் சரி, நான்கு சக்கர வாகனங்களாக இருந்தாலும் சரி, ஒரு மினி படகை போன்ற வடிவமைப்போடு, பார்பதர்க்கே வித்தியாசமான தோற்றத்தோடு உருவாகியுள்ள மனோஜ் ஓம்ரே, அந்த பதிவில் ‘things that should have been built by now for Mumbai’ என்ற வாசகத்தோடு அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
NEWS EDITOR : RP