சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன், அதற்கு காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான் என போதை விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமாக பேசினார்.
போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள
தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இணை ஆணையர் மனோகர், திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் போதையை ஒழிக்கத் தமிழக அரசும் காவல்துறையும் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறித்த காணொளி காட்சியும் மாணவர்கள் மத்தியில் தெரிவித்துக் காண்பிக்கப்பட்டது.
இதில் ரோபோ சங்கர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு நடிகர்களின் குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்தினார். கடந்த சில மாதங்களாக மிகுந்த உடல் நலக்குறைவால் இருந்து மீண்டு வந்த ரோபோ சங்கரை மாணவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதை எடுத்து அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், “நான்கு மாதமாக உலக சூப்பர் ஸ்டாராக நான் தான் இருந்தேன் அனைவருக்கும் தெரியும். தெரியாத்தனமா கிளிய வளர்த்துட்டேன். அது என்ன கிளின்னு தெரியாமல் நான் பட்ட பாடு பெரும்பாடு. ஐந்து மாதம் படுத்த படுக்கையாகிச் சாவின் விளிம்பிற்குச் சென்று விட்டேன். அதற்கு
காரணம் என்னிடமிருந்து சில கெட்ட பழக்கங்கள். அதற்கு அடிமையாகி விட்டேன். உங்களுக்கு முன் உதாரணமாக நான் இருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்று விட்டேன் என மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி உருக்கமாகப் பேசினார்.
NEWS EDITOR : RP