சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). பிளம்பர். இவருடைய மனைவி தேவி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. தேவிக்கு நேற்று பிறந்த நாள். இதனால் அவருக்கு புது துணி வாங்கி கொடுக்க தனது தாயாரிடம் ரூ.2 ஆயிரம் தரும்படி இளையராஜா கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த இளையராஜா, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தனது மனைவி தேவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். பின்னர் படுக்கை அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: