கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் அதே மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 26, 2021 நடந்த இதே போன்ற சம்பவமான ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 26, 2021 ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் மாவட்டத்தில் உள்ள சிங்கோலி பகுதியில் உள்ள அத்வாகலன் என்ற இடத்தில், பழங்குடியின இளைஞர் கன்ஹையா லால் பிலை மினி லாரியில் கட்டி சாலையில் இழுத்துச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை முற்றுகையிட்டு சட்டம்-ஒழுங்கு கேள்வி எழுப்பி வருகின்றன. இதற்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது குறித்தும், இதுபோன்ற வழக்குகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பது குறித்தும் அம்மாநில அரசு தெரிவித்தது.
மினி லாரியில் இருந்து பழங்குடியின இளைஞரை கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ கடந்த வாரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் அந்த வாலிபர் உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர், மினி டிரக்கில் இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறு பிரச்சினைக்காக அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கி, மினி லாரியில் கட்டி வைத்து 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
ஆகஸ்ட் 26, 2021 சம்பவம்:
ஆகஸ்ட் 26 அன்று காலை 6 மணியளவில் சித்தர்மல் குர்ஜார் என்பவர் பைக்கில் கன்ஹையா லால் பிலை மோதியுள்ளார். அப்போது சித்தர்மால் பைக்கில் ஏற்றி வந்த பால் கவிழ்ந்தது. இதையடுத்து சித்தர்மல் தனது குடும்பத்தினரை அழைத்து கன்ஹாவை சரமாரியாக தாக்கினார். அப்போது போது சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த பிக்-அப் வேன் பின்னால் கயிறு கட்டப்பட்டது. அப்போது, பிக்-அப் வேனை நிறுத்தி, கன்ஹாவின் கால்களைக் கட்டி, 100 மீட்டாருக்கு மேல் கயிற்றால் இழுத்துச் சென்றதால், அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான சித்தர்மல் குர்ஜார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது என்று மத்திய பிரதேச பாஜக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.டி.சர்மா தெரிவித்தார்.
NEWS EDITOR : RP