ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் பஞ்சமே இருக்காது. ஜேம்ஸ் பாண்ட் உலகம் முழுவதும் தான் சிறந்த ஸ்பை என கொண்டாட டாம் க்ரூஸ் நான் ஒரு ஸ்பை உலகத்தை உருவாக்குகிறேன் என Mission: Impossible என்ற சீரிஸை உருவாக்கினார். டாம் க்ரூஸை பல நேரங்களில் காப்பாற்றிய இந்த சீரியஸின் கடைசி பாகத்தின் முதல் பார்ட் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி Mission: Impossible – Dead Reckoning Part One வெளியானது.
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு சப் மெரீன் அட்டாக், அந்த அட்டாக்கை செய்தது யார் என்று விசாரித்தால் திடுக்கிடும் தகவலாக ஒரு AI அந்த வேலையை பார்த்துள்ளது. அந்த AI யாருடைய கைக்கு செல்கிறதோ அவர்கள் இந்த உலகத்தையே ஆள்வார்கள் என்ற நிலை உருவாகிறது. இரண்டு பாகங்களாக இருக்கும் சாவியை சேர்த்து அந்த AI யை அழிக்க Ethan Hunt (டாம் க்ரூஸ்) முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் Ethan Hunt வெற்றி பெற்றார என்பதே கதை. படத்தின் கிளைமேக்ஸில் 2ம் பாகத்திற்கு கொடுத்த லீட் ரசிக்க வைக்கும்படி அமைந்தது. 2ம் பாகத்தில் கடலுக்கு அடியில் ஒரு பரபரப்பான சண்டைக்காட்சிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.