கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலினால் வியர்வை, நீரிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் மட்டுமே நோய்கள் பரவும் என்றில்லை. வெயில் காலத்திலும் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுவதுண்டு. அதன்படி, கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்.மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. வாந்தி மற்றும் குமட்டல், வலிப்பு, வேகமாக மூச்சுவிடுவது, மயக்கம், குழப்பம், அதிக வியர்வை மற்றும் மூச்சுத்திணறல், வியர்வை இல்லாமல் வறண்ட சருமம், இதயப்படபடப்பு போன்றவை இதற்கான அறிகுறிகள். இந்நோயால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.சிக்கன்பாக்ஸ் என்பதை சின்னம்மை என்றும் கூறலாம். கோடைக்காலத்தில் இது அதிகம் பரவ கூடியது. சின்னம்மை வருவதற்கு வெரிசெல்லா ஸோஸ்டர் என்கிற வைரஸ்தான் காரணம். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கொப்புளங்கள், தோல் அரிப்பு, சிவத்தல், காய்ச்சல், பசியின்மை மற்றும் தலைவலி உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகள்.
கோடை காலத்தில் நம்மை பாதிக்கும் நோய்களை பற்றி இங்கு காணலாம்..!!
Please follow and like us: