பாகிஸ்தானில் பருவகாலத்தில் பெய்ய கூடிய மழை பொழிவு காணப்படுகிறது. எனினும், அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிக்கட்டிகள் உருகுதல் போன்றவற்றால், அதிக வெள்ளமும் ஏற்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தும், 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஏ.ஆர்.ஒய். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஜூன் 25-ந்தேதியில் இருந்து இதுவரை 86 பேர் உயிரிழந்தும், 151 பேர் காயமடைந்தும் உள்ளனர் என அதுபற்றிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் (என்.டி.எம்.ஏ.) தெரிவித்து உள்ளது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 20 பேரும், பலூசிஸ்தானில் 6 பேரும் உயிரிழந்து உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. பாகிஸ்தானில் நடப்பு 2023-ம் ஆண்டில் 72 சதவீத வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கடந்த ஏப்ரலில் தேசிய பேரிடர் மேலாண் கழகம் கணிப்பு வெளியிட்டு இருந்தது. கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பில் பாகிஸ்தான் சிக்கியது போன்று, நடப்பு ஆண்டிலும் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அது பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் கொண்டு சென்று விடும் என்று என்.டி.எம்.ஏ. கழகத்தின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இனாம் ஹைதர் கூறியுள்ளார்.
அவர்களில் 16 பேர் பெண்கள் மற்றும் 37 பேர் குழந்தைகள் ஆவர். நாடு முழுவதும் தொடர் மழையால், 97 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இவற்றில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையாக 52 பேர் உயிரிழந்து உள்ளனர்.
NEWS EDITOR : RP