இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நேபாள் தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 170- திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 3,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Please follow and like us:
