கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மழையால் சில வீடுகளும் இடிந்துள்ளன. மழை பாதிப்பிற்கு கேரளாவில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோட்டையம் மாவட்டம் முந்தகையம் என்கிற ஊரில் பணிக்கு சென்ற தோட்டத்து தொழிலாளர்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற உள்ளூர் பொதுமக்கள் உடனடியாக கயிறு கட்டி 17 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP