தென் தமிழகத்தில் நாளை அதிக கனமழை

Spread the love

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறையும் என்றும், நாளைய தினம் தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இம்முறை வடகிழக்கு பருவமழை சற்று அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. இன்று காலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு கனமழையை கொட்டி தீர்த்து கொண்டிருக்கிறது. வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளைய தினம் (டிசம்பர் 13) தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 47 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 40 செ.மீ. இது இயல்பை விட 16 சதவீதம் அதிகம்.

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறையும். இது மெதுவாக நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் பரவலாக தான் காணப்படுகிறது. எனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த பின்னர் படிப்படியாக மழை குறையும். அதேசமயம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை காலம் முடிந்துவிடும் எனச் சொல்ல முடியாது.

அந்தந்த காலகட்டத்தை பொறுத்து நீடிக்க வாய்ப்பிருக்கிறது. வரும் 15ஆம் தேதி வாக்கில் அந்தமான் கடற்பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருக்கிறது. இதன் நகர்வு, இதனால் பெய்யக்கூடிய மழை ஆகியவை அடுத்து வரக்கூடிய தினங்களில் தெரிவிக்கப்படும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram