தமிழில் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய ஹன்சிகா திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
யோகா தினத்தையொட்டி யோகா செய்யும் புகைப்படங்களை ஹன்சிகா பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த ஒருவர் ஹன்சிகாவை கேலி செய்யும் வகையில் “இந்த நடிகைகள் அறுவை சிகிச்சை மூலம் ஒட்டுமொத்த உடலையும் குறைத்து விட்டு ஏதோ யோகா செய்துதான் தங்கள் உடலை மாற்றிக்கொண்டதாக நடிக்கிறார்கள்” என்று பதிவு வெளியிட்டு இருந்தார். இது பரபரப்பானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹன்சிகா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த விஷயத்தில் நான் எனக்காக பேசுகிறேன். இந்த உடல் தோற்றத்துக்கு மாற நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன். அதில் யோகாவும் அடங்கும். மேலும் யோகா வெறுப்புகளுக்கு பதிலாக நேர்மறை விஷயங்களை பரப்புவதற்கும் உதவும்” என்று கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP