பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், “தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இங்கு இருக்கும் அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் வெளிநாடுகளுக்குச் சென்று பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
கவர்னரின் கருத்தை மறுபடியும் நினைவுப்படுத்த விடும்புகிறேன். இங்கு இருக்கும் ஜாதி, மத வேற்றுமைகள், காழ்ப்புணர்ச்சிகளில் நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் சர்செய்யாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதில் எந்த பயனும் இல்லை என்று நான் சொல்லவில்லை, கவர்னரே சொல்லியிருக்கிறார்.”
NEWS EDITOR : RP