சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் மத்
திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என அதிமுக மனு அளித்த நிலையிலும், அமைச்சராக தொடர தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லி பயணத்தை முடித்து ஜூன்-27 ஆம் தேதி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP