பிக்சல் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 8 விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கூகுள் பிக்சல் 8 மாடல் பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இத்துடன் பிக்சல் 8 ப்ரோ வாங்கும் போது ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் வாங்குவோர் கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடலை ரூ. 19 ஆயரத்து 990 என்றும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலை ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
NEWS EDITOR : RP