சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்லக்கூடிய இடத்தில் கழிவறை ஒன்று உள்ளது.இங்கு விமான நிலைய தனியார் நிறுவன ஊழியரான மணிவண்ணன் என்பவர் சென்று விட்டு நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வருவதை கவனித்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் அவரை மடக்கி விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்து அவரது சோதனை செய்ததில், அவரது உள்ளாடைக்குள் 8 பாக்கெட்டுகளில் சுமார் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 750 கிராம் அளவிலான தங்கம் கோந்து வடிவில் மறைத்து கடத்தி வந்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
து தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த ரிபாஸ், இன்ஜமாம் ஆகிய 2 பேர் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து சென்னை விமான நிலைய கழிவறையில் விமான நிலைய ஊழியர் மணிவண்ணனிடம் தந்த விட்டு கொழும்பிற்கு தப்பி செல்ல இருந்தது தெரியவந்தது.
NEWS EDITOR : RP