அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 20-ம் தேதி ரூ.55,200 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அன்றைய தினம் வெள்ளி விலையுமே ரூ.100-ஐ கடந்து, ரூ.101 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது.
24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,760-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.97 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.97,000-ஆகவும் உள்ளது.சென்னையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.