தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே இருந்தது. டிசம்பர் 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.47 ஆயிரமாக உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது. இதற்கிடையே, இம்மாதம் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.47,520க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது.தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால்,நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
Please follow and like us: