தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், “உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,360-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,640-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,000 ஆக இருக்கிறது.
NEWS EDITOR : RP