கடந்த 2022 டிச.26-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்த ஆண்டுஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப். 2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 என தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஒரு கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.5,870-க்கும், ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கும் விற்பனையானது. இதன்மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.50,720-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.82.20-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.82,200-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து சென்னை தங்க நகை, வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் தேவைஅதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம். அத்துடன், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
NEWS EDITOR : RP