சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு விலை சிறிது சிறிதாக குறைந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.100 அதிகரித்துரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,000-ஆக இருந்தது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,555-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது.
NEWS EDITOR : RP