தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை நேற்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மாலை தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.47,040-க்கு விற்பனையானது.
தங்கம் விலை உயர்வு குறித்து,சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால், தங்கம்விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இப்போர் முடியும் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது’’.
NEWS EDITOR : RP