பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வருகின்ற 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. காலை முதல் நடைபெற்று வந்த ஆடுகள் விற்பனையில் சேலம், கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும், விற்பனைக்காக தங்களது ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். பின்னா் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. குட்டி ஆடு ஒன்று 400 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய வாரச்சந்தையில் வெள்ளாடுகளை காட்டிலும், செம்மறி ஆடுகள் விற்பனையே அதிகளவு நடந்தது.மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்-க்கு ஆடுகள் விற்பனையானது.
NEWS EDITOR : RP