கோவாவில் உள்ள மபோசா நகரில் கோபி மஞ்சூரியன் (Gobi Manchurian) தடை செய்யப்பட்டுள்ளது. செயற்கையாக சேர்க்கப்படும் நிறமிகள், சுகாதாரம் சார்ந்த பிரச்னை காரணமாக கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு உள்ளூர் சுகாதாரத்துறை தடையை விதித்து இருக்கிறது.சாலையோர உணவகம் முதல் பிரதான உணவகங்கள் வரையில் விற்பனை செய்யப்படும் கோபி மஞ்சூரியனில் (Cauliflower Manchurian) நிறம் மற்றும் சுவைக்காக செயற்கை வர்ணம், சாஸ், சோடா உப்பு போன்றவையும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.இதனால் பல உடல்நல பிரச்னைகளை சுற்றுலா பயணிகள் எதிர்கொள்வதை தொடர்ந்து, சிலர் தங்களின் புகாரையும் முன்வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை சார்பில் முன்னதாகவே தடை செய்யப்பட்டுள்ள சாஸ் உபயோகம் செய்ய கூடாது, நிறமிகளை அதிகம் உபயோகம் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன .
செயற்கை நிறங்களை பயன்படுத்துவதால் கோவாவில் கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை..!!
Please follow and like us: