வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்
சொல்லி உள்ளனர். மேலும், திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்
வழங்கப்படும் எனவும், ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3
ரவுண்ட் வரை வேலை செய்யலாம். ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகித
கமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து டாஸ்க்கள் செய்ய வேண்டும் என்றால் முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி 8 லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். ஆனால், தன் கணக்கில் சேர்ந்த பணத்தை எடுக்கவிடாமல் மேலும் டாஸ்க்கள் செய்ய வேண்டும் எனக் கூறி வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ரம்யா, தனக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அதன்பின் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
Please follow and like us:
