எருமப்பட்டி எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி பூச்சியியல் வல்லுனர் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் இதுகுறித்து எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியதாவது:- எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன. இவற்றை தடுப்பதற்கு ஹொர்போலிங் என்ற மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்தி ஈச்ச வாரி கிராமத்திலும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதை தெளிப்பதன் மூலம் மயில். காட்டு பன்றி, மான், முயல், எலி, காட்டுப் பறவைகள் அண்ட விடாமல் பயிர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் வேலன் அறிவியல் நிலையம் புவியியல் வல்லுநர் முனைவர் சங்கர் கலந்துகொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
NEWS EDITOR : RP