ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று (அக்.29) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இந்த மழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Please follow and like us: