சென்னை சென்னை பெருநகர போலீஸ் காவல் ஆணையரகம், நிர்வாக வசதிக்காக சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 ஆக பிரிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் இயங்கி வருகிறது. இதில் ஆவடி போலீல் கமிஷனரகத்துக்கு உட்பட்டு அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு உள்ளது. இந்த அம்பத்தூர் போக்குவரத்து பிரிவு என்பது அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் போலீல் நிலையங்களை உள்ளடக்கியதாகும்.
இங்கிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் சுஜிதா நியமிக்கப்பட்டார். இவர் ஆவடி காவல் நிலைய சரகத்தில் முதல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஜிதா கடந்த 2011-ம் ஆண்டு நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்த நிலையில் பதவி உயர்வு பெற்று தற்போது அம்பத்தூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
NEWS EDITOR : RP