பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அஸிமா பானு பெங்களூரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பெங்களூரு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரான முதல் முஸ்லிம் பெண் இவராவார். கடந்த 23 வருடமாக பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய நிலையில் தற்போது இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
தனது இளநிலை மருத்துவ படிப்பை பெங்களூர் அரசு மருத்துகல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 1990-ம் ஆண்டு தொடங்கினார். 2000ம் ஆண்டு அதே கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றார்.
கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மைக்ரோ பயோலஜி துறையில் தனது பணியை துவங்கிய அஸீமா பானு அதன் பின்னர் பல்வேறு துறைகளில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் அவரது அஸீமா பானுவின் பங்களிப்பை பலரால பாராட்டி பேசப்பட்டது. கொரோனா காலத்தில் விக்டோரியா மருத்துவமனையில் பொறுப்பு அதிகாரியாக சிறப்பாக செயலாற்றினார். இந்த காலகட்டத்தில் கொரானோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனது சொந்த செலவில் டேபிள் ஃபேன், கழிவறை பொருட்கள், சுடுதண்ணீர் வைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார்.ஹிஜாபு அணிந்த முஸ்லீம் பெண் என்பதால் முந்தைய பாஜக அரசால் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டடார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக முதல் முஸ்லிம் பெண்ணாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP