இந்த வாரம் ott தளங்களில் வெளியாகும் படங்கள்..!!

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த நவம்பர் 10-ம் தேதி திரைக்கு வந்தது. 2014-ம் ஆண்டு சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படமாக இருந்தாலும் படுதோல்வியை சந்தித்தது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram