சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி அசோக்நகர் 92-வது தெருவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.இதையடுத்து, அவரிடம் விசாரித்ததில் அவர் மறைத்து வைத்திருந்த 30 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
Please follow and like us: