கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் அதிகாலை 2 குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து உள்ளார். மைசூரு கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவின் மலகாலா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி லட்சுமி இந்த தம்பதியினருக்கு ஆதித்யா (4) என்ற மகனும்,அமுல்யா என்ற மகளும் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் அதிகாலை 2 குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து உள்ளார். மனைவியையும் சுத்தியலால் தாக்கி உள்ளார்.
பின்னர் ஸ்ரீகாந்த் தலைமறைவாகி விட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி மைசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீரங்கப்பட்டணா ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP