நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களில் வினியோகம் செய்யப்பட்ட தார்பாய்களின் தரத்தை சென்னை வேளாண்மை ஆணையர் அலுவலகத்தில் இருந்து வந்த வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முக சுந்தரம் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அவர் திருச்செங்கோடு, எலச்சிபாளையம், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி மற்றும் நாமக்கல் ஆகிய வட்டாரங்களில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட தார்பாய்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளை நேரடியாக சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்தார். இதில் நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
NEWS EDITOR : RP