பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ், தற்போது கே.ஜி.எஃப் படங்கள் மூலம் இந்தியளவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் Part 1 – Ceasefire திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபாஸூடன் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இன்று உலக முழுவதும் கோலாகலமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. சலார் திரைப்படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விமர்சனங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்று வெளியான சலார் படத்தை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் படம் குறித்த விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்..!!
Please follow and like us: