பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தன்னை இடம் பிடித்து உள்ளார்.
மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகை கஜோல் தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொடரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக கஜோல் அறிவித்துருந்தார். இதுகுறித்து டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர் வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறேன் என குறிப்பிட்டிர்ருந்தார்.
கஜோலுக்கு டுவிட்டரில் 36 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.4 கோடிக்கு மேல் பாலோவர்களும் உள்ளனர். இந்த அளவிற்கு ரசிகர்களை வைத்துள்ள அவர், திடீரென இப்படி அறிவித்திருப்பது ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே உள்ள பதிவுகளை அவர் நீக்கியிருந்தார். எனினும் சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதற்கான காரணங்களை அவர் வெளியிடாமல் இருந்த நிலையில் இவரின் இந்த செயல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அவர் நடிப்பில் வரவிருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ நிகழ்ச்சிக்கான விளம்பர கருவியைத் தவிர வேறொன்றுமில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் நேற்று கஜோல் திடீரென சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்காள் இன்று கஜோலை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
NEWS EDITOR : RP