வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும். அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம். ஆளுநர் வெறும் நியமன உறுப்பினர்தான்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது. விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். இதற்கு முன்பாக மது குடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது இல்லையா?
தனி அதிகாரம் உள்ளதாக கருதப்படும் அமலாக்கத்துறை, நீதிமன்றம், சிபிஐ, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை போன்றவை மத்திய அரசின் கை விரல்கள். உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது? வேளாண் அறிவை விவசாயிகைளை விட முதலமைச்சரும்,அவரது அமைச்சர்களும் தான் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியத்தை சீமான் பேசினால் பாசிசம். மோடி பேசினால் நேஷலிஸம்.
NEWS EDITOR : RP