ஈரோடு ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் (ஈஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில், திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மொத்தம் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி 3 மாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அன்னக்கொடி முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இதில் 3 கோவில்களின் உண்டியல்களிலும் மொத்தம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 646 மற்றும் 44 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திஇருந்தனர். மேலும் கோசாலையில் வைக்கப்பட்டு உள்ள உண்டியலில் ரூ.1,233-ம் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
NEWS EDITOR : RP