ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.
அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்
சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்
ஈடுபட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த
கூலித் தொழிலாளர் சுப்பிரமணி தலைமறைவானார்.
Please follow and like us: