புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். புதுச்சேரி புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். மாணவர் சேர்க்கை புதுவையில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியான நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியானது. கடந்த மாதம் 26-ந்தேதி முதல் அரசுப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வழிகாட்டுதல் குழு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது.
வருகிற 12-ந்தேதி தரவரிசை வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் சேர்க்கைக்கு பின் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்து வருகிற 19-ந்தேதி முதல் பிளஸ்-1 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
NEWS EDITOR : RP