கூகுளின் அல்ஃபபட் நிறுனத்திற்கு சொந்தமான யூடியூப் கடந்த 2005ல் தான் முதன்முதலாக உருவாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. அதுவரை இணையதள போஸ்டர்கள், கட்டுரைகள், வலைப்பதிவுகள் மற்றும் தேர்தல் கணிப்புகள் என சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து வந்த யூடியூப்பையும் அமெரிக்க அரசியல்வாதிகள் கனகச்சிதமாக பயன்படுத்தி அதன் பலனை தேர்தலில் அறுவடை செய்தனர்.யூடியூப் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 தொடங்கப்பட்டது. இதனை பேபால் நிறுவனத்தில் பணியாற்றிய மூன்று முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ் சென் , சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோர் உருவாக்கினர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் புருனோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் கூகுளின் அல்ஃபபெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. அக்டோபர் 2006 இல், யூடியூப்பை கூகுள் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு வாங்கியது.அமெரிக்க தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியதும் மைஸ்பேஸ் சேனலில் 2007 டிசம்பரில் மட்டும் 60 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை ஈர்த்தது. அதேபோல உலகளவில் சுமார் 90 மில்லியன் பேர் சப்கிரைஸ்கர்களாக இணைந்தனர். தேர்தல் நேரம் என்பதால் அரசியல் தளத்தில் இந்த சேனல் மிகவும் பிரபலமாக அறியப்பட்டது.