கொல்கத்தா: வங்கதேசத்திற்கும், இந்தியாவின் கொல்கத்தா மற்றும் புவனேஸ்வருக்கும் இடையே வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
காலை 6.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் லேசான பாதிப்புகள் கொல்கத்தாவிலும் உணர முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கம் குறி்த்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்காள விரிகுடாவில், 19.52°N அட்சரேகை மற்றும் 88.55°E தீர்க்கரேகையில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இதேபோல நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அது ரிக்டர் அளவில் 3.7 என பதிவாகியிருந்ததால் பாதிப்புகள் குறைவாக இருந்தது. மட்டுமல்லாது நிலத்திலிருந்து 7 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.