மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக சென்னையில் சில பகுதிகள் ஆங்காங்கே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5-வது நாளாக வெள்ளநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். உணவு, குடிநீர் கூட இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மின்சார சேவையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் செய்வதறியாது தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5வது நாளாக வெள்ளநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி..!!
Please follow and like us: