ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரத்தில் வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு அவர்கள் தங்கும் இடங்கள், அவர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18-ந்தேதி(நாளை) முதல் 22-ந்தேதி வரை 5 நாட்களுக்கு சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜி-20 பிரதிநிதிகள் செல்லக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP