சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.
மேலும் புதியதாக கட்டப்பட்ட 3-வது மண்டல அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் திறந்துவைத்த டி.ஆர்.பாலு, கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தையும் பார்வையிட்டு, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனாவிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: