சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் காயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியும் தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தற்போது நலமுடன் உள்ளார். இன்று காலை அவரை சந்தித்தோம். நன்றாக பேசுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலாஜி மதியத்திற்கு தனியறைக்கு மாற்றப்பட இருக்கிறார். தாக்குதல் நடத்திய விக்னேஷை நேற்றை போலீசார் கைது செய்தனர். அவர்மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Please follow and like us:
