கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்திற்கான பணிகள் முழுமையாக நிறைவடையாததால் பல ஆண்டுகளாக திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. படக்குழுவின் பல்வேறு முயற்சிகளுக்கு பின் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. லியோ படத்துடன் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகுமென தகவல் வெளியாகி இருந்த நிலையில் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநராக இருந்த கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். விஜய்யின் லியோவிலும் நடித்துள்ளார்.இது குறித்து நேர்காணல் ஒன்றில் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது:துருவ நட்சத்திரம் படம் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறமால் நிற்க காரணம் போதிய அளவு பணமில்லை. இதன் காரணத்தால் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் நானாக யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. அது தானாகவே நடந்தது.
NEWS EDITOR : RP